எச்சரிக்கை! தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட பகீர் தகவல்! ஆடிபோன ரசிகர்கள்!

எச்சரிக்கை! தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட பகீர் தகவல்! ஆடிபோன ரசிகர்கள்!


vishnu-vishal-warning-about-fake-message

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிகுழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இப்படத்தை தொடர்ந்து அவர் நீர்பறவை, குள்ளநரிக் கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.  மேலும் அவரது கைவசம் தற்போது காதன், ஜகஜால கில்லாடி, எப்ஐஆர் போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், நபர் ஒருவர்  தனது பெயரை தவறாக பயன்படுத்தி மெசேஜ் அனுப்பி வருவதாகவும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தும்,  மேலும் இத்தகைய முட்டாள்தனத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறி ஸ்கிரீன்ஷாட் மெசேஜ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மதன் என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்த மெசேஜில்,  இந்த குறுஞ்செய்தி ஒரு தமிழ் திரைப்படத்தின் விசாரணைக்காக அனுப்பப்படுகிறது. ஒரு திறமையான படக்குழு இப்படத்திற்கு பின்னால் உள்ளது. ஒரு பெரிய தயாரிப்பாளர் இப்படத்திற்காக நிதியுதவி அளிக்கிறார். அவர்கள்தான் இந்த மெசேஜை உங்களுக்கு அனுப்ப கூறினர். அதிக சம்பளம் வழங்கப்படும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மேற்கொண்டு விவரங்களை தருகிறேன். மேலும் இப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார் என 
கூறப்பட்டிருந்தது.  இந்த நிலையில் விரைவில் அந்த நபர் மீது புகார் அளிக்க இருப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.