அது முடிஞ்சதும்.. செம்ம எதிர்பார்ப்பில் கேட்டுவந்த ரசிகர்கள்! விஷ்ணு விஷால் வெளியிட்ட சூப்பரான தகவல்!

அது முடிஞ்சதும்.. செம்ம எதிர்பார்ப்பில் கேட்டுவந்த ரசிகர்கள்! விஷ்ணு விஷால் வெளியிட்ட சூப்பரான தகவல்!


Vishnu vishal talk about ratsasan 2 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான திரைப்படம் ராட்சசன். இப்படத்தை முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருந்தார்.

செம த்ரில்லர் படமான ராட்சசன் பலரால் பாராட்டப்பட்டதோடு, பெரும் வசூல் சாதனையும் படைத்தது. இப்படத்தில் அமலாபால், அம்மு அபிராமி, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். ஜிப்ரான் இசையமைத்த இந்தப் படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிலையில் ராட்சசன் 2 எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

vishnu vishal

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் விஷ்ணு விஷாலிடம் கேட்ட நிலையில் அவர், இயக்குனர் ராம்குமார் தனுஷ் நடிப்பில் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், அது முடிந்தபிறகு ராட்சசன் 2வை இயக்குவார் எனவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராக உள்ள இப்படத்தை 2022ஆம் ஆண்டு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.