சினிமா

சோதனைக்கு மேல் சோதனைகளை சந்திக்கும் பிரபல தமிழ் நடிகர்! இப்போ என்ன ஆச்சு தெரியுமா?

Summary:

Vishnu vishal met accident at shooting spot

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். தமிழ் சினிமாவில் இதுவரை பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் விஷ்ணு. முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை போன்ற இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான ராட்சசன் படமும் மாபெரும் வெற்றிபெற்றது. சினிமாவில் நாளுக்கு நாள் இவரது வளர்ச்சி அதிகரித்தாலும், சில மாதங்களுக்கு முன்பு இவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் விவாகரத்து ஆனது.

https://cdn.tamilspark.com/media/163219z4-croppedImg_789883775.jpeg

அதன்பின்னர் நடிகை அமலாபாலுடன் கிசுகிசு எழுந்தது. அதையெல்லாம் தாண்டி அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விஷுனு விஷாலுக்கு தற்போது மேலும் ஒரு சிக்கல் எழுத்துள்ளது.

புதிய படத்தின் படப்பிடிப்பில் சண்டை காட்சியில் நடித்திருக்கிறார். அப்போது எதிர்ப்பாராத விதமாக அவருக்கு அடி பட்டு கழுத்து, முதுகெலும்பு, தோள்பட்டையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.

இந்த தகவலை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.


 


Advertisement