ஆள் அடையாளமே தெரியாமல் முற்றிலும் மாறிப்போன விஷ்ணுவிஷால்.! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!

ஆள் அடையாளமே தெரியாமல் முற்றிலும் மாறிப்போன விஷ்ணுவிஷால்.! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!



vishnu-vishal-latest-photo-viral

 தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். 
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான விஷ்ணு ஜீவா, குள்ளநரி கூட்டம், நேற்று இன்று நாளை,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெரும்  ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மேலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ராட்சசன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

அதனைதொடர்ந்து விஷ்ணுவிஷால் நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும் அதனையடுத்து  இடம் பொருள் ஏவல் என்ற படம் உருவாகி வெளியாகவுள்ளது.

vishnu vishal

மேலும் இயக்குனர் எழிலின் இயக்கத்தில் ஜகஜால கில்லாடி என்ற படத்தில் விஷ்ணுவிஷால் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது மாஸ் புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் விஷ்ணு விஷாலா இது ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் என கூறிவருகின்றனர்.