ப்பா.. கெத்து காட்டுறாரே! முதலில் கப்பிங் தெரபி இப்போ இதுவா! ரசிகர்களை மிரள வைத்த விஷ்ணு விஷாலின் வீடியோ!!

ப்பா.. கெத்து காட்டுறாரே! முதலில் கப்பிங் தெரபி இப்போ இதுவா! ரசிகர்களை மிரள வைத்த விஷ்ணு விஷாலின் வீடியோ!!


vishnu vishal ice bath video viral

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் கடந்த சில காலங்களுக்கு முன்பு பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரின் திருமண மற்றும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில்  வைரலாகும்.

 விஷ்ணு விஷால் தனது உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். விஷ்ணு விஷால் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பண்டைய கால சிகிச்சை முறையான கப்பிங் தெரபி சிகிச்சையை மேற்கொண்டிருந்தார். மேலும் அத்தகைய புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டிருந்த நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் பலரும் பெரும் ஆச்சரியம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் தற்போது ஐஸ் பாத் எடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.