உற்சாகமாக படப்பிடிப்பில் இருந்த விஷ்ணுவுக்கு இப்படியொரு சோகமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

உற்சாகமாக படப்பிடிப்பில் இருந்த விஷ்ணுவுக்கு இப்படியொரு சோகமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!


vishnu-vishal-got-small-accident-in-shooting-spot

தமிழில் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் அறிமுகமாகி மாபெரும் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு விஷால், சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த ரட்சகன் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து அவர் தற்போது பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன், இதன் படப்பிடிப்பில் சண்டைகாட்சிகளில் நடித்தபோது, இவருக்கு எதிர்பாராதவிதமாக விஷ்ணுவின் கழுத்து, கை, முதுகெலும்புகளில் அடிபட்டிருக்கிறது.

இதற்காக சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு , இன்னும் 4 வாரங்கள் ஓய்வில் இருக்கப் போவதாக தனது ட்விட்டர் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “ கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வலி பயங்கரமாக இருக்கிறது. கைகளிலும் வலி. சிகிச்சைக்குப் பின் நான்கு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் குணமாகி படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்று நம்புகிறேன். உங்கள் ஆதரவும் ஆசிர்வாதமும் தேவை’’ என்று தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.