சினிமா

அடேங்கப்பா.. டைட்டிலே சும்மா மிரள வைக்குதே! அட்டகாசமான டீசருடன் வெளியான விஷால் 32 படத்தலைப்பு!!

Summary:

அடேங்கப்பா.. டைட்டிலே சும்மா மிரள வைக்குதே! டீசருடன் வெளியான விஷால் 32 படதலைப்பு!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் எனிமி. அதனை தொடர்ந்து விஷால் கைவசம் வீரமே வாகை சூடும், துப்பறிவாளன் 2 போன்ற படங்கள் உள்ளன. அதன் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அதை தொடர்ந்து விஷால் வினோத் குமார் இயக்கத்தில் தனது 32 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான ராணா மற்றும் ரமணா ஆகியோர்  தயாரிக்கின்றனர். இப்படத்தில் நாயகியாக நடிகை சுனைனா நடிக்கிறார். மேலும் சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகவுள்ளது. இந்நிலையில் விஷால் 32வது படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகும் என  விஷால் அறிவித்திருந்த நிலையில், அது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதாவது விஷால் 32 படத்திற்கு லத்தி என பெயரிடப்பட்டுள்ளது. 


Advertisement