சினிமா

வாவ்.. செம க்யூட்! முதன்முதலாக வெளிவந்த விராட் கோலியின் மகளின் புகைப்படம்! தீயாய் பரவும் வீடியோ!

Summary:

வாவ்.. அதே க்யூட்! முதன்முதலாக விராட் கோலியின் மகளின் முகத்தை கண்ட ரசிகர்கள்! தீயாய் பரவும் வீடியோ!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பிரபல பாலிவுட்  நடிகையான அனுஷ்கா ஷர்மாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 2021ஆம்  ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

விராட் கோலி அனுஷ்கா தம்பதியினர் அந்த குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டிருந்தனர். வாமிகாவின் புகைப்படங்களை நடிகை அனுஷ்கா அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். ஆனால் அவரது முகத்தை மட்டும் காட்டியது இல்லை. மேலும் தங்களது குழந்தை ஊடகங்களில் இருந்து விலகி சுதந்திரமாக இருக்கவே அவரது முகத்தை வெளியிடுவது இல்லை எனவும் அனுஷ்கா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வாமிகாவின் புகைப்படம் முதன் முதலாக வெளியாகியுள்ளது. அதாவது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் கோலி அரைசதம் அடித்த போது, அனுஷ்கா சர்மா தனது மகள் வாமிகாவுடன் இணைந்து கைத்தட்டி ஆரவாரம் செய்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதன் மூலமே வாமிகாவின் முகத்தை ரசிகர்கள் முதன்முதலாக பார்த்துள்ளனர்.


Advertisement