வாய்ப்பு இல்லாததால் ப்ரோக்கர் வேலையில் இறங்கிய நடிகர் விமல்!

Summary:

Vimal acting as broker in the broker movie

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விமல். சாதாரண துணை நடிகராக அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவராக மாறினார்.

களவாணி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இவர் தற்போது புதுமுக நடிகர்களின் வருகையால் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு படத்தில் நடித்தார். இது ஒரு அடல்ட் சம்மந்தமான படம்.

இந்நிலையில் தற்போது சதா நடித்த டார்ச் லைட் படத்தை இயக்கிய அப்துல் மஜித். இயக்கத்தில் ‘தி புரோக்கர்’ படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அண்ணாதுரை படத்தில் நடித்த டயானா சாம்பிகா நடிக்கிறார்.

அப்துல் மஜித் இயக்கிய டார்ச் லைட் திரைப்படம் பாலியல் தொழிலாளிகளை மையமாகக் கொண்டு உருவாகி இருந்தது. ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை.

புரோக்கர் தொழிலை மையமாகக் கொண்டு தயாராகிவரும் இந்தப் படத்தில் விமல் புரோக்கராக நடிக்கிறார். அனைத்துத் தொழில்களிலும் புரோக்கரின் பணி முக்கியமாக இருப்பதை காமெடி கலந்து இந்தப் படத்தில் கூற இருப்பதாக தெரிகிறது.


Advertisement