சினிமா

அர்ஜுன் ரெட்டி ரீமேக் ஆகிறது...! நடிகர் யார் தெரியுமா?

Summary:

vikram-son-acting

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிக பெரிய ஹிட் கொடுத்த படம் தான் "அர்ஜுன் ரெட்டி". மாபெரும் வெற்றி பெற்று மிகப்பெரிய வசூல் மழை பொழிந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. 

இந்த படத்தின் மூலம் பிரபல நடிகர் சியான் விக்ரம் அவர்களின் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயகனாக கால் பாதிக்க உள்ளார். அறிமுக நாயகனாக வரும் நடிகர் விக்ரமின் மகன் மேல் அதிக எதிர்பார்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பம் ஆகிய நிலையில் இந்த படத்தில் துருவிற்கு ஜோடியாக வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி நடிக்க உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வெளியே தெரிந்த நடிகை ரைசா இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். 

இசையமைப்பாளராக ரத்தன் செயல்படுகிறார். மேலும் ஒளிப்பதிவாராக சுகுமார் செயல்படுகிறார். குக்கு, ஜோக்கர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ராஜு முருகன் இந்த படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார். 


Advertisement