சினிமா

வெறித்தனமான கோபம் மிரட்டும் விக்ரம் மகன்; வெளியானது ஆதித்யா வர்மா டீசர்.!

Summary:

vikram son - thuruv vikram - athithya varma teaser release

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. விஜய் தேவரகொண்டா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தெலுங்கு மட்டும் இல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றிபெற்றது இந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம்.

இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, பிரபல இயக்குனர் பாலா இந்த படத்தை இயக்கினார். E4 என்றடைன்மெண்ட் என்ற இந்த நிறுவனம் படத்தை தயாரித்தது.

இந்நிலையில் இயக்குனருக்கும், தயாரிப்பளாருக்கும் ஏற்பட்ட சண்டையால் வர்மா படத்தை கைவிடுவதாக தயாரிப்பு தரப்பு அறிக்கை வெளியிட்டது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் படத்தின் பைனல் காப்பி எங்களுக்கு பிடிக்கவில்லை, நடிகர் துருவ்வை தவிர அனைவரையும் தூக்கிவிட்டு படத்தை முதலில் இருந்து எடுக்கப்போவதாக தெரிவித்திருந்தது.

அர்ஜீன் ரெட்டி உதவி இயக்குநர் கிரிசயா ஆதித்யா வர்மாவை இயக்க, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் பனிதா சந்து எனும் பாலிவுட் மாடல் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போ பட வேலைகள் முழுவதும் முடிந்து டீசர் வெளியாகியுள்ளது. இதையடுத்து படத்தை வெளியிடும் வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.


Advertisement