அடேங்கப்பா... பிதாமகன் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கி சம்பளம் எவ்வளவு தெரியுமா.?



Vikram got 1.25 Croce salary for pithamagan movie

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்திற்கும் தனது உடலை வருத்தி வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலிலும், ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றது. 

தற்போது இவர் நடிப்பில் தங்களான் மற்றும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இப்படங்களின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் ப்ளாக் பாஸ்டர் அடித்த திரைப்படமான பிதாமகன் படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Pithamagan movie

அதாவது வசூலையும், விக்ரம் திரை வாழ்க்கையில் பெயர் சொல்லும் கதாபாத்திரமாக அமைந்தது பிதாமகன் சித்தன். இந்த படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் விக்ரம். பிதாமகன் படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் 1.25 கோடி சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.