முடியல.. இவரால மொத்தமும் வெயிட்டிங்க்ல இருக்கு... ஏ.ஆர்.ரகுமான் மீது கடுப்பான நடிகர் விக்ரம்..!vikram anger with ar rahman

கோப்ரா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையை அமைத்து கொடுக்காததால், படத்தின் வெளியீடு தாமதமாகிறது என படக்குழு அவர் மீது கோபமாக உள்ளதாக கோலிவுட் வட்டத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த திரைப்படம் "கோப்ரா". இந்த திரைப்படம் இந்த ஆண்டு மக்களால் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் முக்கியமான ஒன்றாகும். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் வெளியீடு தள்ளி போக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. தயாரிப்பாளர் லலித் குமாரின் 7 ஸ்கிரீன் தயாரிப்பில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார்.

cobra

இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதற்கான காரணமாக ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்காதது தான் காரணம் என்று கூறப்படுகிறது. அது ஒரு பக்கம் இருக்கும் நிலையில், நடிகர் விக்ரமின் அடுத்த பிரமாண்ட படமான "பொன்னியின் செல்வன்" வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதனால் எப்பொழுது ஏ.ஆர்.ரகுமான் கோப்ரா படத்தின் பின்னணி இசையை அமைத்து, படத்தை வெளியிடுவது என்று சீயான் விக்ரம் மற்றும் படக்குழு ஏ.ஆர்.ரகுமானின் மீது கோபத்துடன் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.