"பிரபல நடிகரின் பிரச்னையை தீர்த்த விஜயகாந்த்!" அந்த நடிகர் யார் தெரியுமா?

"பிரபல நடிகரின் பிரச்னையை தீர்த்த விஜயகாந்த்!" அந்த நடிகர் யார் தெரியுமா?


Vijaykandh solved problems for actor sam

ஒரு மாடலாக தன் வாழ்க்கையைத் துவங்கி, 2001ம் ஆண்டு "12பி" படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஷாம். தொடர்ந்து இவர் லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே, மனதோடு மழைக்காலம், இன்பா, தூண்டில், அந்தோணி யார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Sam

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்து வரும் ஷாம், ஒரு படத்தில் நடித்தபோது சம்பளத்தை முழுமையாகக் கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று கூறியதாக பிரச்சனைகள் எழுந்ததாம். அப்போது இவரை மிரட்டுவதற்காக ஆட்கள் அவர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இதனால் பயந்து போன ஷாம், உடனே கேப்டன் விஜயகாந்திற்கு போன் செய்து "இந்த மாதிரி ஆட்கள் என் வீட்டிற்கு வந்துள்ளனர்" என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்ட விஜயகாந்த், "நீ போனை ஆப் செய்துவிட்டு தூங்கு. இது இனிமேல் என்னுடைய பிரச்சனை" என்று கூறினாராம்.

Sam

மேலும் அந்த தயாரிப்பாளருக்கும் போன் செய்து "இது இனிமேல் என்னுடைய பிரச்சனை. இனிமேல் நீங்கள் ஷாமை தொந்தரவு செய்யக்கூடாது" என்று கூறி அந்தப் பிரச்னையை முடித்துக் கொடுத்தாராம். இதை ஷாம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.