சாந்தனுவின் குறும்படத்தை பார்த்து பாராட்டிய தளபதி விஜய்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

சாந்தனுவின் குறும்படத்தை பார்த்து பாராட்டிய தளபதி விஜய்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

நாடு முழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 5வது கட்டமாக  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது குடும்பங்களுடன் நேரங்களை செலவிட்டு வருகின்றனர். மேலும் பலர் சமூக வலைதளங்களில் டிக்டாக் வீடியோக்களை வெளியிடுவது, புகைப்படங்களை வெளியிடுவது என பிசியாக உள்ளனர்.

இந்நிலையில் நடிகர்  பாக்யராஜின் மகனும், பிரபல நடிகருமான சாந்தனு வீட்டில் இருந்தபடியே கொஞ்சம் கொரோனோ நிறைய காதல் என்ற குறும்படத்தை எழுதி அதனை இயக்கி வெளியிட்டுள்ளார். மேலும் இந்த குறும்படத்தில் அவரது மனைவி கீர்த்தியும் நடித்துள்ளார். இந்த குறும்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் பல பிரபலங்களும் அவர்களுக்கு  வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிலையில் இந்த குறும்படத்தை பார்த்து விஜய் வாழ்த்தியது குறித்து சாந்தனு தெரிவித்துள்ளார். விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு தனது குறும்படத்தின் டீசரை முதலில் விஜய்க்கு அனுப்பி வைத்தாராம். அதில் "செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேக்குறான் பாரு அவன் மனுஷன். செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேக்குறான் பாரு அவன் தான் புருஷன்" என்ற டயலாக்கை கண்ட விஜய், அட்ரா அட்ரா அட்ரா.. Factu Factu factu என்று கூறினாராம். பின்னர் குறும்படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என குறுஞ்செய்தி அனுப்பினாராம். அவரது பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்ததாக சாந்தனு கூறியுள்ளார். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo