சினிமா

ரீமேக் விஜய்..! டம்மி ஸ்டார் மகேஷ்..! கொரோனாவுக்கு நடுவே விஜய் - மகேஷ்பாபு ரசிகர்கள் மோதல்.!

Summary:

Vijay vs Mahesh babu fans twitter fight

கொரோனாவின் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விஜய் - மகேஷ் பாபு ரசிகர்கள் மத்தியில் திடீரென சமூக வலைத்தளங்களில் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.

தமிழில் விஜய்யும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட மிகப்பெரிய நடிகர்கள். இவர்கள் நடித்த படம் வெளியாக போகிறது என்றாலே ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தொடங்கிவிடுவார்கள். இந்நிலையில், திடீரென விஜய் மற்றும் மகேஷ்பாபு ரசிகர்களுக்குள் சோஷியல் மீடியாவில் வார்த்தை யுத்தம் தொடங்கியுள்ளது.

மகேஷ் பாபுவின் வெற்றிப்படங்கள் சிலவற்றின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடித்துள்ள நிலையில், ரீமேக் ஸ்டார் விஜய் என மகேஷ் பாபுவின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய இதற்கு ஆதரவாக பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலடி கொடுக்க, டம்மிஸ்டார் மகேஷ் என்ற ஹாஷ்டாகை உருவாக்கி விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். உலகமே கொரோனா பீதியில் இருக்கும்போது இவர்களின் இந்த சண்டை மக்கள் மத்தியில் சற்று வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement