எஸ். ஏ. சந்திரசேகர்- ராதிகா சரத்குமார் கூட்டணியில் மிகப்பெரிய திட்டத்துடன் களமிறங்கும் விஜய் டிவி.?!

எஸ். ஏ. சந்திரசேகர்- ராதிகா சரத்குமார் கூட்டணியில் மிகப்பெரிய திட்டத்துடன் களமிறங்கும் விஜய் டிவி.?!


vijay-tv-teams-up-with-sac-and-radhika-sarathkumar-crea

விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சீரியலில் ராதிகா சரத்குமார் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் ஆகியோர் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் நடித்த இரண்டு நாயகிகளையும் வளைத்து கொண்டிருக்கிறது விஜய் டிவி.

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் சன் டிவி ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி ஆகியவற்றிற்கிடையே டிஆர்பி தொடர்பான மோதல் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதலிடம் பிடிப்பதற்காக ரசிகர்களை  வளைத்துப் போட புதுப்புது கதையம்சம் கொண்ட சீரியல்களை எடுத்து போட்டிப் போட்டு ஒளிபரப்பு செய்கின்றன.

SAC

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் உருவாகி ஒளிபரப்பிற்கு தயாராக இருக்கும் தொலைக்காட்சி தொடரில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும் 'சித்தி' போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவருமான ராதிகா சரத்குமார் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர்.

இந்தத் தொடருக்கு 'கிழக்கு வாசல்' என  பெயரிடப்பட்டுள்ளது. இவர்களுடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட 'பூவே பூச்சூடவா' மற்றும் 'ஒரே ஊர்ல ஒரு ராஜகுமாரி' ஆகிய சீரியல்களில் கதாநாயகியாக நடித்த ரேஷ்மா மற்றும் அஸ்வினி ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

SAC

நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கப் போகும் 'கிழக்கு வாசல்' தொடர் வெகு விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் இந்தத் தொடர் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரின் மூலம் சன் டிவி மற்றும் ஜீ தமிழுக்கு விஜய் டிவி கடும் போட்டியை  கொடுக்கும் என எதிர்பார்க்கின்றனர் சின்னத்திரை ரசிகர்கள்.