கியூட் பூனையுடன், கியூட்டிபை ஷிவாங்கி.. குளுகுளுனு இருக்குதே..! 

கியூட் பூனையுடன், கியூட்டிபை ஷிவாங்கி.. குளுகுளுனு இருக்குதே..! 



Vijay TV Sivaangi Krishnakumar Instagram Latest Picture

சின்னத்திரையில் இருந்து மக்களிடையே அறிமுகமாகும் பல நபர்களும், அவர்களின் குறும்புத்தனத்தால் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிய ஷிவாங்கி, பின்னாளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பெரிதும் அறியப்பட்டார். 

cinema

சூப்பர் சிங்கரில் ஷிவாங்கி பாடல் பாடுவதை ரசிக்க ஒருகூட்டம் இருக்க, அவரின் செல்லத்தனமான செய்கைகளை ரசிக்கவும் கூட்டம் இருந்தது. இதனால் பின்னாளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இணைக்கப்பட்டு, பெரிதும் அறியப்பட்டார். அண்ணன் - தங்கையாக புகழும் - ஷிவாங்கியும் செய்த சேட்டைகள், பாச விடியோக்கள் பெரிதும் வரவேற்பை பெற்றது. 

cinema

ரசிகர்களிடையே அவ்வப்போது இணையத்தளம் வாயிலாக நேரலையில் கலந்துகொண்டு பேசும் ஷிவாங்கி, எந்த நேரமும் துறுதுறுவென விளையாட்டுத்தனமாக இருப்பது பலரால் ரசிக்கப்பட்டது. அந்த வகையில், ஷிவாங்கி தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று பதிவு செய்துள்ள புகைப்படம் பெரும் வைரலாகி வருகிறது.