அடேங்கப்பா!! விஜய் டிவி ராமருக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? ஜோடி யாருன்னு தெரிஞ்சா தலைசுற்றிபோயிருவீங்க...

அடேங்கப்பா!! விஜய் டிவி ராமருக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? ஜோடி யாருன்னு தெரிஞ்சா தலைசுற்றிபோயிருவீங்க...



vijay-tv-ramar-act-as-hero-in-new-movie

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ராமர். இவரது பேச்சுக்கும், காமெடிக்கும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

மேலும் இவர் பெண் வேடமணிந்து பேசிய என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற டயலாக் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானது. அதனை தொடர்ந்து அவர் ஆத்தாடி என்ன உடம்பீ என்ற வேற லெவல் ஸ்டைலில் பாடிய  பாடலால் இவர் பெருமளவில் ஹிட் ஆனார்.

ramar

அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் நடித்து வந்த அவர் ராமர் வீடு என்ற காமெடி நிகழ்ச்சியிலும் முக்கிய கதாபாத்திரமாக பங்கேற்றார். இந்நிலையில் அவர் தற்போது திரைத்துறையில் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். சூப்பர் டாக்கீஸ் அவதார் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தை குறும்பட இயக்குனர் மணி ராம் இயக்குகிறார்.மேலும் ஐபிஸ் கே.தினேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கவுள்ளார். 

மேலும் காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் ராமருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நடிக்க உள்ளார். மேலும் இதன் பூஜை மிக சிறப்பாக சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.