பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
அடேங்கப்பா.. மாடர்ன் உடையில் கலக்குறாரே! நம்ம ராஜுவின் மனைவியை பார்த்தீங்களா!! அசத்தல் புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிக்பாஸ் டைட்டிலை வென்றவர் ராஜு மோகன். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. ராஜு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர்.
அதனைத் தொடர்ந்து அவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் ஜோடிகள், ராஜு வீட்ல பார்ட்டி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் ராஜு தனது மனைவியுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அதாவது அவர்கள் லண்டனில் ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ளார். அங்கு தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜு பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது. அதில் ராஜுவின் மனைவியை மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.