கள்ளநோட்டு பதுக்கிய ஆதியை வெளுத்து கைது செய்த சந்தியா.. வீட்டை விட்டு துறத்துவாரா சிவகாமி?..! ராஜாராணி 2 ப்ரோமோ வைரல்..!!Vijay tv Raja Rani 2 promo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சீரியல் ராஜாராணி 2. இத்தொடரில் மாமியாராக இருக்கும் சிவகாமி தனது மருமகள் சந்தியாவிற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி, பின் ஐபிஎஸ் தேர்வு எழுத அனுமதி வழங்கினார். 

மேலும் சந்தியாவிற்கு குண்டடி பட்டதால் மீண்டும் ஐபிஎஸ் ட்ரெயினிங் செல்லக்கூடாது என்று சிவகாமி கூறுகிறார். ஆனால் அதனை மீறிய சந்தியா சென்னைக்கு சென்று தீவிரவாதிகளிடமிருந்து தனது தலைமை காவல் அதிகாரியை மீட்டு பெரும்சாதனையை படைத்தார்.

விஜய் டிவி

இந்த நிலையில், அவர் என்கவுண்டர் சந்தியா என்ற பெயருடன் கம்பீரமான போலீசாக களமிறங்கினார். என்னதான் தனது அண்ணி போலீஸ் என்றாலும் ஆதியின் ஆட்டம் மட்டும் அடங்கவில்லை. தினம்தினம் திருட்டுத்தனம் செய்வதை பழக்கமாக வைத்துள்ளார்.

வேலைசெய்த இடத்தில் கள்ளநோட்டினை புழக்கத்தில் விட்டு வேலையை விட்டு வெளியேற்றினர். மனைவி வேலை செய்யும் இடத்திலும் திருடி அசிங்கப்பட்டார். தற்போது அதையெல்லாம் தாண்டி கள்ளநோட்டு கும்பலுடன் கைகோர்த்து லட்சக்கணக்கில் கள்ளநோட்டினை புழக்கத்தில் விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

விஜய் டிவி

இதுகுறித்து சந்தியாவிற்கு தகவல் கிடைக்கவே, அவர் சம்பவ இடத்திற்கு சென்று அனைவரையும் அடித்து உதைக்க, ஆதி தப்பிக்கவே அவரையும் அடித்து முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கை கழட்டி அதிர்ச்சியடைந்தார். 

இப்படி சிக்கியும் ஆதி திருந்தாமல் எதிர்த்து பேச கடுப்பான சந்தியா கடமைதான் முக்கியம் என அவரை காவல்நிலையத்தில் ஒப்படைக்கிறார். இதோடு சந்தியா இனி சிவகாமியின் வீட்டில் இருப்பாரா? அல்லது இதோடு வெளியெறுவாரா? என்ற கேள்வியுடன் இன்று ப்ரோமோ வெளியாகியுள்ளது.