சினிமா

பிரபல சீரியல் நடிகரை காதலிக்கிறாரா விஜய் டிவி பிரபலம்? வெளியான தகவல்கள்!

Summary:

vijay tv pandiyan stores actress chithra love matter

புது புது நிகழ்ச்சிகள், சீரியல்கள் என மக்கள் மத்தியில் பிரபலமானது விஜய் டிவி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஓன்று  பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பிகளுக்கு இடையே உள்ள பாசத்தை மையமாக கொண்ட இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சீரியலில் முல்லை என்ற பெயரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் சித்ரா. சித்ரா, அந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் கதிர் என்பவரை  காதலிக்கிறார் என்ற செய்தி உலா வந்தது. இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், நான் இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.

கதிர் என்னுடைய சீரியலில் நடிப்பவர் அவ்வளவு தான், எனக்கும், அவருக்கும் வேறு எந்த சம்மந்தமும் இல்லை. மேலும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம், எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம் என்று தெரிவித்துள்ளார் சித்ரா.


Advertisement