குழந்தைகளோடு புறப்பட்ட கண்ணம்மா.. கதறித்துடிக்கும் பாரதி.. சூரியன் உதித்தபின் நமஸ்காரம் செய்தால் என்ன பலன்?..!Vijay TV Bharathi Kannamma Serial Kannamma Left With Children

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நெடுந்தொடரில், இன்று வரை மறக்க முடியாத தொடர் பாரதி கண்ணம்மா. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்துவிட மாட்டார்களா? என தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்தது. 

ஆனால், திரும்பும் இடமெல்லாம் மக்களுக்கு ட்விஸ்ட் வைத்த பாரதி கண்ணம்மா இயக்குனர் குழு, இறுதிவரை மக்களை பரபரப்புடன் எடுத்து சென்றது. கடந்த வாரத்தில் மருத்துவரான பாரதி ஒருவழியாக கண்ணம்மா மற்றும் குழந்தைகளை ஆவணத்தின் அடிப்படையில் தனது மனைவி & குழந்தைகளாக ஏற்றுக்கொண்டார். 

bharathi kannamma

அதுவரை தான் செய்த தவறுகளை கூறி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டாலும், அவர் பாரதியை மன்னிக்க தயாராக இல்லை. தனது தரப்பில் பல வாதங்களை முன்வைத்து பாரதியிடம் இருந்து குழந்தைகளோடு தன்னை பிரித்து சென்றார். 

இந்நிலையில், அடுத்த வாரத்தில் கண்ணம்மா என்ன செய்ய போகிறார்? என்பதை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்த வேலையில், அடுத்த வாரத்திற்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. அதன்படி, கண்ணம்மா தனது குழந்தைகளின் பேச்சுக்களில் உள்ள கூற்றுகளை புரிந்துகொண்டு அவர்களுடன் எங்கேயோ சென்றுவிடுகிறார். 

bharathi kannamma

ஆனால், கண்ணம்மாவை வீட்டிற்கு அழைத்து வரும் திட்டத்துடன் குடும்பத்தோடு புறப்பட்ட பாரதிக்கு இறுதியில் ஏமாற்றம் மிஞ்சவே, அவர் கண்ணம்மா & குழந்தைகள் எங்கே சென்று இருப்பார்கள் என எண்ணி சூரியன் உதித்த பின்னர் நமஸ்காரம் செய்து கதறுகிறார்.