13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
மேடையில் கண்கலங்கி அழுத பிரியங்கா..! ஏன் தெரியுமா?.!! தீயாய் பரவும் வைரல் வீடியோ..!!
சின்னத்திரை ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி. இதில் உள்ள நெடுந்தொடர்கள் மற்றும் புதுப்புது நிகழ்ச்சிகள் ஆகியவை மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
மற்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை விட விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது என்றே கூறலாம். அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிறைய ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ரசிகர்களின் ஃபேவரட் தொகுப்பாளனி தான் பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர் நிகழ்ச்சியை எப்பொழுதும் கலகலப்பாக கொண்டு செல்வார். தற்போது பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கிவரும் நிலையில், பிரியங்காவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு விஷயம் நடந்துள்ளது.
பிரியங்கா சின்னத்திரைக்கு வந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிவிட்டனவாம். இதன் காரணமாக அவருக்கு மற்ற பிரபலங்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்ததால் மேடையிலேயே ஆனந்த கண்ணீரில் திளைத்தார் பிரியங்கா. அதன் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.