சினிமா

நடிகர் விஜய்யின் இளையதளபதி பட்டத்திற்கு ஆப்பு வைத்த அவரது மகன்!. வெளியான அதிர்ச்சி காரணம்!.

Summary:

நடிகர் விஜய்யின் இளையதளபதி பட்டத்திற்கு ஆப்பு வைத்த அவரது மகன்!. வெளியான அதிர்ச்சி காரணம்!.


நடிகர் இளையதளபதி விஜய்யின் மகன் "சஞ்சய்"  நடிகர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் நடித்தார். அந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

 அதனை அடுத்து எந்த படத்திலும் நடிக்காத விஜய்யின் மகன் சஞ்சய், இன்னும் சில ஆண்டுகளில் கதாநாயகனாக சினிமாவில் களம் இறங்கப் போகிறார். 18 வயது ஆகும் சஞ்சய் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க போகிறார் என்ற செய்தி வெளியானதால், இளையதளபதி விஜயின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

 நடிகர் விஜய் மகன் சஞ்சய் சினிமாவுக்குத் தேவையான நடனம், சண்டை, என அனைத்து கலைகளிலும் பயிற்சி கொடுக்கப்பட்டு தற்போது முழுத் திறமையுடன் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 மேலும் மெர்சல் படத்திற்கு பிறகு, "இளைய தளபதி" என்ற தன் பட்டத்தை தளபதி என்று மாற்றிய விஜய், இளைய தளபதி பட்டத்தை தன் மகனுக்கு கொடுக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

 தற்போது இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், நடிகர் விஜயின் ரசிகர்கள், அவரின் மகன் சஞ்சய் நடிக்கவிருக்கும் படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதற்கு பிறகு நடிகர் விஜய்க்கு உள்ள அனைத்து ரசிகர்களும் அவரின் மகனுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement