சினிமா வீடியோ

செம அசால்டாக இளைஞர் செய்த காரியம்! ஆச்சரியத்தில் மிரண்டுபோன தளபதி விஜய்! வைரலாகும் வீடியோ!

Summary:

vijay shocking after seeing youngman magic video

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய், அட்லி இயக்கத்தில் நடித்து வெளியான திரைப்படம் மெர்சல். இந்த படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்க அவருடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜெ. சூர்யா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் இதில் விஜய் மேஜிக் செய்பவராக நடித்திருந்தார். மேலும் ஏராளமான மேஜிக் செய்து ரசிகர்களையும் பிரமிக்க வைத்தார்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் மேஜிக் செய்வதற்காக அவருக்கு இளைஞர் ஒருவர் பயிற்சி அளித்து வழிகாட்டியுள்ளார். அப்பொழுது அந்த இளைஞன் சீட்டுக்கட்டுகளை வைத்து மேஜிக் செய்வதை கண்டு விஜய் ஆச்சரியத்தில் மிரண்டு போயுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement