செம்ம படம்.. மிஸ் பண்ணிடாதீங்க! புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி! எந்த படத்தை தெரியுமா??

செம்ம படம்.. மிஸ் பண்ணிடாதீங்க! புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி! எந்த படத்தை தெரியுமா??



Vijay sethupathi tweet about karnan movie

தமிழ் திரையுலகில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தை  பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பெருமளவில் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் கர்ணன் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படம் அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி வசூலிலும் சாதனை படைத்த இத்திரைப்படத்தை குறித்து  பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் எக்ஸலெண்ட் மூவி, டோண்ட் மிஸ் இட் என கர்ணன் படம் குறித்து பதிவிட்டுள்ளார்.