பயங்கரமான கொடூரன்தான்! ரசிச்சு செய்தேன்! வில்லனான விஜய்சேதுபதி கூறிய சுவாரஸ்ய தகவல்!

பயங்கரமான கொடூரன்தான்! ரசிச்சு செய்தேன்! வில்லனான விஜய்சேதுபதி கூறிய சுவாரஸ்ய தகவல்!


Vijay sethupathi talk about master movie

மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விஜய்யின் 64வது திரைப்படம் மாஸ்டர். இதில் ஹீரோயினாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் விஜய்க்கு எதிராக கொடூர வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். 

 இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா  அச்சுறுத்தலால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் படம் வெளியாவது தள்ளி போயுள்ளது.  மேலும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது. 

vijay
 
இந்நிலையில் சமீபத்தில் மாஸ்டர் குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், மாஸ்டர் படத்தில் வில்லனாக மிகவும் மகிழ்ச்சியோடு ரசித்து நடித்தேன். எல்லோருக்குள்ளும் அழுக்கு இருக்கிறது. அதை ஒழிக்க அனைவருக்கும் வழிகிடைக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒருவர் வில்லனாக நடிக்கும் போது அந்த அழுக்கை வெளியே கொண்டு வர வழி கிடைக்கிறது. நான் மாஸ்டர் படத்தில் கொடூர கேங்ஸ்டராக நடிக்கிறேன் என கூறியுள்ளார்.