செம சான்ஸ்.. இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே.! கடும் வருத்தத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள்! ஏன் தெரியுமா??

செம சான்ஸ்.. இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே.! கடும் வருத்தத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள்! ஏன் தெரியுமா??


vijay-sethupathi-miss-the-chance-to-act-in-ponniyin-sel

தமிழ் சினிமாவில் சாதாரண துணை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கி, குறுகிய காலகட்டத்திலேயே தனது கடின உழைப்பால், முயற்சியால் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.  எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று சிறப்பாக நடிக்கக் கூடியவர்.

இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் அவதாரம் எடுத்து பல டாப் நட்சத்திரங்களின் திரைப்படங்களில் மிரட்டி வருகிறார். இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். முக்கோண காதல் கதையை மையமாக கொண்ட இதில் ஹீரோயின்களாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர்.

vijay sethupathi

இந்த நிலையில் தற்போது பரவிவரும் தகவலால் விஜய் சேதுபதி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அதாவது, இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் கார்த்திக்கு பதிலாக முதலில் விஜய் சேதுபதிதான் நடிக்கவிருந்தாராம்.

ஆனால் அவர் வேறு படங்களில் ஒப்பந்தமாகியிருந்ததால் அவரால் அதில் நடிக்க முடியவில்லையாம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், அருமையான வாய்ப்பு. இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே என வருத்தப்பட்டு வருகின்றனர்.