தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
அப்போ செம மாஸ்தான்! அட்லீ- ஷாருக்கான் படத்தில் வில்லனாகும் பிரபல தமிழ் நடிகர்! வெளிவந்த தகவல்!!
தமிழ் சினிமாவில் வெளி வந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான ராஜாராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அதனை தொடர்ந்து அவர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற மாஸ் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும் அவர் முன்னணி இயக்குனராகவும் வலம் வந்தார்.
இந்நிலையில் அட்லீ தற்போது பாலிவுட் சினிமாவிலும் இயக்குனராக காலடி எடுத்து வைத்துள்ளார். அதாவது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். அப்படத்திற்கு ஜவான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் ஜவான் படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. அதாவது படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. விஜய் சேதுபதி இதற்கு முன் தமிழ், தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.