பல வருடங்கள் வெளிவராத விஜய் சேதுபதியின் அந்த படம்.! வெளியிட தயாராகும் முன்னணி தயாரிப்பு நிறுவனம்!!

பல வருடங்கள் வெளிவராத விஜய் சேதுபதியின் அந்த படம்.! வெளியிட தயாராகும் முன்னணி தயாரிப்பு நிறுவனம்!!



vijay-sethupathi-idam-porul-yeval-movie-release-date-vi

சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள்செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம்தான் தென்மேற்கு பருவக்காற்று.இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த முதல்  திரைப்படம்  இதுதான். அதனை தொடர்ந்து  சீனு ராமசாமி,விஜய் சேதுபதி  கூட்டணியில்  உருவான தர்மதுரை படம் பெரும் வெற்றிபெற்றது.

அதன் பின் இவர்கள் கூட்டணியில் உருவான மாமனிதன் படம் சில வருடங்கள் வெளிவராத நிலையில் தற்போது வெளியிடப்பட்டது.இந்த திரைப்படத்தைப் போல் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பின் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் என்ற  திரைப்படமானது இன்று வரை வெளியிடபடாத நிலையில் உள்ளது.
தற்போது இந்த திரைப்படத்தை வெளியிட முன்னணி தயாரிப்பு நிறுவனமான  ரெட் ஜெயிண்ட் மூவிஸ் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. 

vijay sethupathi

இப்படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால்,ஐஸ்வர்யா ராஜேஷ்,நந்திதா நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைக்க கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள்ளார் .இதுவரை இப்படத்தின் அறிவிப்புகள் எதுவும் வெளிவராத நிலையில் விரைவில் இந்த திரைப்படத்திற்கான அப்டேட் வெளிவர வாய்ப்பு உள்ளதாக  எதிர்பார்க்கபடுகிறது.