அட.. விஜய் சேதுபதியின் மகளா இது! ஆள் அடையாளமே தெரியலையே.! லேட்டஸ்ட் புகைப்படத்தால் சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!

அட.. விஜய் சேதுபதியின் மகளா இது! ஆள் அடையாளமே தெரியலையே.! லேட்டஸ்ட் புகைப்படத்தால் சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!


vijay-sethupathi-family-photo-viral-SMQDH2

தமிழ் சினிமாவில் தற்போது மிக முக்கிய ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த அவர் பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்து தனது தீராத உழைப்பால், முயற்சியால் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், கெஸ்ட் ரோல் என பல கதாபாத்திரத்திலும் வாழ்ந்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி மனைவி ஜெஸி. அவரது மகன் சூர்யா மற்றும் மகள் ஸ்ரீஜா. மகன் சூர்யா சிந்துபாத் மற்றும் நானும் ரவுடிதான் ஆகிய படங்களில்  நடித்துள்ளார். அவரது மகள் ஸ்ரீஜாவும் முகிழ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

vijay sethupathi

இந்நிலையில் விஜய் சேதுபதி தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட நெட்டிசன்கள் விஜய் சேதுபதியின் மகளாக இது? நல்லா வளர்ந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டாரே என கூறி வருகின்றனர்.

vijay sethupathi