சினிமா

விஜய் சேதுபதியின் படத்தை காண திரையரங்கிற்கு வந்த விஜய் சேதுபதியின் மனைவி, மகன், மகள்... வைரலாகும் புகைப்படம்.!!

Summary:

விஜய் சேதுபதியின் படத்தை காண திரையரங்கிற்கு வந்த விஜய் சேதுபதியின் மனைவி, மகன், மகள்... வைரலாகும் புகைப்படம்.!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக செம பிசியாக  இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.  இவர் குறுகிய காலத்திலேயே தனது தீராத முயற்சியால் உச்சநிலைக்கு சென்றார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

 தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து, இந்தியளவில் கவனம் பெற்று வருகிறார். சினிமாவில் ஹீரோவாக மட்டும் இல்லாமல், வில்லனாகவும் கலக்கி வருகிறார். சமீபத்தில் மாஸ்டர் படத்தில் இவரின் பவானி கதாபாத்திரம் அனைவராலும் பெரியளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் தயாராகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
தற்போது காத்து வாக்குல இரண்டு காதல் படத்தை காண விஜய் சேதுபதியின் மனைவி, மகன், மகள் என மூவரும் FDFS-க்கு சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோஸ் மற்றும் வீடியோஸ் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.  

 

 

 


Advertisement