அரசியலில் களமிறங்கும் விஜய் சேதுபதி! அவரே வெளியிட்டஅதிரடி அறிவிப்பு.!

அரசியலில் களமிறங்கும் விஜய் சேதுபதி! அவரே வெளியிட்டஅதிரடி அறிவிப்பு.!


vijay sethupathi changed as a politician

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தென் மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியவர் நடிகர் விஜய்சேதுபதி.

அதனை தொடர்ந்து பீட்சா, இதற்குதானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா, ரம்மி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ,சூதுகவ்வும்,றெக்க,  கவண், கருப்பன்,சேதுபதி, செக்க சிவந்த வானம், 96 என குறுகிய காலத்தில் தனது கடின உழைப்பால் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.நடிகர் விஜய் சேதுபதி தற்போது மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

vijay sethupathi

மேலும் இவரது பந்தா இல்லாத வெளிப்படையான, எளிமையான  நடத்தையாலும், இரக்க குணத்தாலும் இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதன் 100 வது நாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.

vijay sethupathiஅதில் பேசிய அவர் தனது அடுத்த படத்தை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது விஜய் சேதுபதி 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் துக்ளக் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கஉள்ளார். மேலும் இது முழுமையான அரசியல் சார்ந்த படம் எனவும்  தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு சீதக்காதி இயக்குனர் பாலாஜி தரணீதரன் வசனம் எழுதுகிறார்.

னவே பட்டையை கிளப்பும் அரசியல் வசனங்களுடன், மாபெரும் அரசியல்வாதியாக விஜய்சேதுபதியை இப்படத்தில் காணலாம் என செய்திகள் வெளிவந்துள்ளது.