விஜய் 64 படப்பிடிப்பில் விஜய் சேதுபதி செய்த காரியம்! மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்! அசத்தல் வீடியோ இதோ!

விஜய் 64 படப்பிடிப்பில் விஜய் சேதுபதி செய்த காரியம்! மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்! அசத்தல் வீடியோ இதோ!


vijay-sethupathi-celebrate-fan-birthday-at-shooting-spo

தமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில் விஜய், நடிப்பில் வந்த திரைப்படம் பிகில். விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிய இந்த படம் தீபாவளியை முன்னிட்டு  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் தனது 64 வது படமாக கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடித்து வருகிறார். 

 மேலும், இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம்,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தளபதி 64வது படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

vijay sethupathi

இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது.  தளபதி 64 படத்தில்  நடிகர் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெற்ற படப்பிடிப்பிற்காக விஜய்சேதுபதி அங்கு சென்றுள்ளார்.இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர். 

 இந்நிலையில் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது பிறந்த நாளன்று விஜய் சேதுபதியின் கையால் கேக் ஊட்டி விட  வேண்டும் என ஆசைப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி அந்த இளைஞனை கேக் வெட்ட சொல்லி அதனை அவருக்கு ஊட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.