குடிப்பழக்கம் நல்லதல்ல., ஆனால் நான் குடிப்பேன் - மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் விஜய்சேதுபதி..! சர்ச்சையை கிளப்பும் வீடியோ..!!

குடிப்பழக்கம் நல்லதல்ல., ஆனால் நான் குடிப்பேன் - மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் விஜய்சேதுபதி..! சர்ச்சையை கிளப்பும் வீடியோ..!!


Vijay Sethupathi About Drinking Habit Loyola College Student

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் கடந்த 2010-ல் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து சேதுபதி, 96, விக்ரம் வேதா, காத்துவாக்குல ரெண்டுகாதல், விக்ரம், மாமனிதன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். 

vijay sethupathi

இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி, "குடிப்பழக்கம் நல்ல பழக்கம் கிடையாது. ஆனால் எனக்கு குடிப்பழக்கம் உண்டு. இந்த வியாபார உலகம் உங்களது நேரத்தை திருட பார்க்கிறது. 

vijay sethupathi

அத்துடன் சமூக ஊடகங்களும் போலி சுதந்திரத்தை வழங்குகிறது" என்று ஓபனாக கூறியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகவே, சமூக ஆர்வலர்கள் 'இவர் முதலில் குடிப்பதை நிறுத்தி இந்த வசனத்தை கூறியிருந்தால் அனைவரும் கேட்டிருப்பார். ஆனால் இவரே எனக்கு குடிப்பழக்கமுண்டு என்று கூறியது மாணவர்களின் மனதில் நஞ்சை விதைப்பது போல இருக்கிறது' என கூறி வருகின்றனர். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.