விஜய் அப்படி சொன்னாரா? கொண்டாத்தில் விஜய் ரசிகர்கள்!

Vijay planned to watch sarkar movie with fans


Vijay planned to watch sarkar movie with fans

தமிழ் ரசிகர்களின் தளபதி நடிகர் விஜய். தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் நடிகர் விஜய். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் சர்க்கார். இந்த படத்திற்கு அதிக சர்ச்சைகள் வந்தாலும் படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. 2018 ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூலான திரைப்படம் சர்க்கார்.

தற்போது அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறார் விஜய். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இந்நிலையில் சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை படைத்து 50 நாட்களை கடந்துள்ளது. 

vijay

இதனை பெருமை படுத்தும் விதமாக நடிகர் விஜய் திருநெல்வேலிக்கு சென்று ராம் முத்துராம் திரை அரங்கின் உரிமையாளர் ராம் அவர்களை சந்தித்துள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராம்.

மேலும் முத்துராம் திரையரங்கில் ஒரு நாள் தனது படத்தை ரசிகர்களுடன்  கண்டுகளிக்க ஏற்பட்டு செய்யுமாறு நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார் ராம். இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்துள்ளனர்.