அடேங்கப்பா! தளபதி 64 படத்தில் விஜய்யின் பெயர் இதுதானா? வெளியான மாஸ் தகவல் !

vijay name in thalapathi 64 movie


vijay name in thalapathi 64 movie

 விஜய், இயக்குனர் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து உருவாகிய திரைப்படம் பிகில். பெண்களின் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கிய அந்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி  ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது .

அந்த படத்தை தொடர்ந்து விஜய், மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில்  தளபதி64 படத்தில் நடிக்க உள்ளார்.  இந்த படத்தில் கதாநாயகியாக ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகன் நடிக்கவுள்ளார்.  

thalapathi 64

மேலும் அப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும் , மலையாள நடிகர் ஆன்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு, நடிகர் ப்ரவீன்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தளபதி 64 படத்தில் விஜய்யின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தளபதி 64 படத்தில் விஜய்யின் பெயர் ஜேம்ஸ் துரைராஜ் என்றும் அதனை சுருக்கி செல்லமாக JD என்று அழைப்பார்கள் எனவும் தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் அதிகாரபூர்வமாக படக்குழு இதுகுறித்த தகவலை வெளியிடவில்லை.