விஜய் ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. லியோ படக்குழு அறிவிப்பு.!

விஜய் ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. லியோ படக்குழு அறிவிப்பு.!



Vijay in Leo movie 1St single today evening release

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

Leo

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்,நடிகை பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார்.

Leo

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போதைய இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்தடுத்த அப்டேட்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இன்று நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இந்த அறிவிப்பு விஜய் ரசிகனிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.