விஜய்யின் GOAT திரைப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அசத்தல் தகவல்!

விஜய்யின் GOAT திரைப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அசத்தல் தகவல்!



Vijay in goat movie release date

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போதைய இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

vijay

மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, வைபவ், அரவிந்த், பிரேம்ஜி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படிப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்தில் நடைபெற்று வந்தது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு 12 மணிக்கு வெளியாகியது. அதன்படி, இந்த படத்திற்கு GOAT அதாவது Greatest Of All Time என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

vijay

இந்த திரைப்படம் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஜூன் 13ஆம் தேதியே இந்த திரைப்படத்தை வெளியிடப்படக் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் ஜூன் 13ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதால் தொடர் விடுமுறையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.