ஜெய்ஹிந்த்.. தளபதி விஜய் வீட்டில் கோலாகலமாக தொடங்கிய 75-வது சுதந்திரதின கொண்டாட்டம்..! வைரலாகும் புகைப்படம்..!!



vijay-house-independance-day-celebration

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடித்த சில படங்கள் தோல்வியில் முடிந்தாலும், பெரும்பாலான படங்கள் வெற்றியையே அளித்துள்ளது. தற்போது இவரது நடிப்பில் "வாரிசு" திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. 

குடும்ப கதைகளத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் கலந்த இந்த திரைப்படம் வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியில் இந்தியாவின் 75 சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி வரும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்கப்படுகிறது.

vijay

இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தேசப்பற்று கொண்டவர்கள் பலரும் தேசிய கொடியை தங்களது முகப்பு பக்கமாக வைத்துள்ளனர். இதனை சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் பின்பற்றி வரும் நிலையில், நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றியுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.