விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்.! நடிகர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு.!

விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்.! நடிகர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு.!vijay has appointed new executives

விஜய்யின் தந்தையும் இயக்குநருமான  எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஒன்றை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்த செய்தி பரவியநிலையில் நடிகர் விஜய் அரசியலில் இணைந்துவிட்டதாக தகவல்கள் பரவியது. 

இந்த நிலையில் நடிகர் விஜய், அது தனது தந்தை தொடங்கிய கட்சி. அதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மேலும் எனது ரசிகர்கள் என் தந்தை கட்சித் துவங்கிவிட்டார் என்பதற்காக அக்கட்சியில் இணையவோ, கட்சிப் பணியாற்றவோ தேவையில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

vijay makkal paniyagam

இந்நிலையில் விஜய் தற்போது  தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்களை நியமித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும், அவர் வெளியிட்ட அறிவிப்பில், எனது புகைப்படம், இயக்கத்தின் பெயர், கொடி உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் அனுமதி பெறவேண்டும் என்றும் மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடிகர் விஜய் எச்சரித்துள்ளார். இதனை விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள நபர்களும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.