திரையரங்கு என்னாச்சு! தமிழக முதல்வருக்கு கேள்வியெழுப்பி விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டர்!vijay-fans-ask-question-to-chief-minister-about-theatre

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  தியேட்டர்கள் மூடப்பட்டு படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிய மாஸ்டர் திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும்  தியேட்டர் திறக்கப்பட்ட பிறகே மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

vijay fans

ஆனால் சமீபத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் பிறப்பிக்கப்பட்ட போதும்  தியேட்டர்கள் திறப்பது குறித்த எந்த  அறிவிப்பும் அரசு வெளியிடவில்லை.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு, கொரோனா மறந்தாச்சு! இயல்புநிலை வந்தாச்சு! திரையரங்கம் என்னாச்சு?  தளபதியாரின் மாஸ்டர் வகுப்பிற்காக காத்திருக்கிறோம் என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.