
Vijay fan video goes viral against to admk party regarding sarkar issue
தீபாவளி அன்று வெளியான சர்க்கார் படம் ஆளும் கட்சியை மிகவும் விமர்சிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. தமிழக அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் படத்திற்கு எதிராக போர் கொடி தூக்கினர்.
சர்ச்சைக்குரிய காட்சிகளை தூக்கவிட்டால் படம் தடைசெய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். மேலும் சர்க்கார் படத்திற்கு எதிராக அங்கங்கே போராட்டங்கள் வெடித்தன. மதுரையில் ஒரு தியேட்டர் அருகே போராட்டக்குழுவினர் போராட்டம் நடத்தினர்.
சென்னை காசி தியேட்டர் உள்ளே புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த சர்க்கார் பேனர்களை கிழித்தனர். இந்நிலையில் போராட்ட காரர்களுக்கு சவால் விடும் வகையில் விஜய் ரசிகர் ஒருவர் அதிமுக கொடிக்கு தீ வைத்தது அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அது சம்மந்தமான வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் எங்க தளபதியை பகைத்துக்கொண்டாள் இதுதான் ஆகும், உங்களலால் பேனரைத்தான் கிழிக்க முடியும், எங்களை ஒன்றும் செய்ய முடியாது இதுதான் எங்க சர்க்கார் என்று அந்த இளைஞர் பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ.
அட கேனப்பயலுகளா.. இவனுக விஜய உதைபட வைக்காம ஓயமாட்டானுக போல pic.twitter.com/SZE2y3gpIH
— Wolverine (@Parithiist) November 9, 2018
Advertisement
Advertisement