சினிமா

தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் பெயரில் நடந்த சிறப்பு பூஜைகள் மற்றும் கோலாகல கொண்டாட்டங்கள்! அப்படியென்ன விசேஷம் தெரியுமா?

Summary:

நடிகர் விஜய், சினிமாவில் நுழைந்து 28 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் கோவிலில் சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது பிறந்தநாள் மற்றும் படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். மேலும் அவர்கள் நற்பணி மன்றம், மக்கள் இயக்கம் போன்றவற்றை அமைத்து பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய் 1992-ஆம் ஆண்டு முதன்முறையாக ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதனை தொடர்ந்து பல இயக்குனர்களின் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில்  நடித்து தற்போது உச்சநட்சத்திரமாக ஜொலிக்கிறார். மேலும் அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படம் வெளியாகாமல் இருந்தது. 

விஜய் ரசிகர்கள்

இந்நிலையில் தற்போது தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில்  தளபதி விஜய் ஹீரோவாக நடிக்கத் துவங்கி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகளை செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement