சினிமா

பிகில் படத்திற்கு டிக்கெட் புக் செய்வதற்கு பதிலாக விஜய் ரசிகர் செய்த காரியம்!! கிண்டல் செய்த தயாரிப்பாளர்!!

Summary:

Vijay fan book ticket to kaithi mistakely

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி விஜய் நடிப்பில் பிகில் மற்றும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி ஆகிய படங்கள் வெளிவர உள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

 மேலும் இரு படங்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக விற்கப்பட்டு வருகின்றன. மேலும் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் படத்திற்கு டிக்கெட்டுகள் முன்பதிவுகள் துவங்கிய சில நாட்களிலேயே விற்று முடிந்துள்ளது. 

 இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் ஆன்லைனில் டிக்கெட் புக்
செய்யும்போது தவறுதலாக கைதி படத்திற்கு டிக்கெட் புக் செய்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவு செய்த அந்த நபர் கைதி பட தயாரிப்பாளருக்கு இதனை டேக் செய்துள்ளார். 

 இதனை தொடர்ந்து அந்த பதிவிற்கு தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு அறிவுதான் இல்லை என பதிலளித்துள்ளார். 


Advertisement