விஜய் அரசியலுக்கு வர இது தான் காரணமா? வெளியான சுவாரஸ்ய தகவல்!

விஜய் அரசியலுக்கு வர இது தான் காரணமா? வெளியான சுவாரஸ்ய தகவல்!



Vijay enter politics for josiyam

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த தளபதி விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதனையடுத்து வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Josiyam

இதனையடுத்து விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசியலில் போட்டியிட உள்ளதால் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். 

அதன்படி, தற்போது அவர் நடித்து வரும் GOAT மற்றும் தளபதி 69 திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த புதிய திரைப்படங்களிலும் நடிக்கப் போவதில்லை என கூறப்படுகிறது.

Josiyam

இதனிடையே கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் அவர் கட்சி சம்மந்தமாக பல்வேறு கருத்துகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர் ஒருவர் விஜய்க்கு முதல்வராகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியதன் பின்னர் தான் விஜய் துணிந்து அரசியலில் களமிறங்கியதாக ஒரு தகவல் பரவி வருகிறது.