சினிமா

முதன்முறையாக நடிகர் விஜய் தேவரகொண்டா செய்த காரியம்! ப்பா.. அவரோட அம்மா, அப்பாவோட ரியாக்ஷனை பார்த்தீர்களா!! வீடியோ இதோ!

Summary:

முதன்முறையாக நடிகர் விஜய் தேவரகொண்டா செய்த காரியம்! ப்பா.. அவரோட அம்மா, அப்பாவோட ரியாக்ஷனை பார்த்தீர்களா!! வீடியோ இதோ!

தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகள் எக்கச்சக்கம். இவர் நோட்டா என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களையும் பெருமளவில் கவர்ந்தார்.

விஜய் தேவரகொண்டா தற்போது பூரி கெஜன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடிக்கிறார். மேலும் அந்த படத்தில் முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். இதுவே மைக் டைசன் நடிக்கும் முதல் இந்திய படம் ஆகும். இந்த நிலையில் அண்மையில் விஜய் தேவரகொண்டா தனது அம்மா,அப்பா மற்றும் தம்பி ஆகியோரை முதன்முறையாக தனி விமானத்தின் மூலம் திருப்பதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

இதை அவரது தம்பி வீடியோவாக எடுக்க, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அனைவரும் உற்சாகத்துடன் பெரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் அதனை கண்ட பிரபலங்களும், ரசிகர்களும் விஜய் தேவரகொண்டாவை வாழ்த்தியுள்ளனர்.


Advertisement