விஜய் ஆண்டனி மனைவி மகள் மீராவின் இறப்புக்கு பின் போட்ட முதல் ட்வீட்..சோகத்தின் உச்சநிலை..!Vijay Antony's first tweet after the death of his wife and daughter Meera..The height of tragedy..!

விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த இசை அமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். இவரது இசைக்கு மட்டுமல்லாமல் இவருடைய நடிப்புக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் அனைவரின் கவனத்தையும் இவர் பக்கம் திருப்பியது என்று சொல்லலாம்.

மேலும் விஜய் ஆண்டனி ஃபாத்திமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  இரண்டு மகள்கள் உள்ள நிலையில் திடீரென்று விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Vijay Antony wife tweet

இதனையடுத்து தன் மகள் இறந்த பின் இன்று முதல் முறையாக விஜய் ஆண்டனி மனைவி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவானது கான்போர் அனைவரையும் கண் கலங்க வைக்கிறது.

அதில் ஃபாத்திமா நீ 16 வருடங்கள் தான் இருப்பாய் என்று எனக்கு தெரியாமல் போய் விட்டது மகளே தெரிந்திருந்தால் உன்னை சூரியன், நிலவுக்கு கூட காட்டாமல் உன்னோடு இன்னும் நெருக்கமாக இருந்திருப்பேன்.. உன் எண்ணங்களில் மூழ்கி நான் இறந்து போகிறேன். நீ இல்லாமல் வாழ முடியவில்லை உன் அப்பா அம்மாவிடம் திரும்பி வந்துரு பாப்பா. உன் தங்கை உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறாள். மிஸ் யூ தங்கம்.!!  என்று பதிவிட்டுள்ளார்.