சினிமா

நடிகர் விஜய் ஆண்டனியா இது! வெளியான புதிய கெட்டப்பை பார்த்து பிரமித்து போன ரசிகர்கள்.

Summary:

Vijay antony new look

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடித்த சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து இன்று முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

முதலில் இசையமைப்பாளராக பணியாற்றிய விஜய் ஆண்டனிக்கு நடிப்பின் ஆர்வம் ஏற்ப்பட்டதால் நான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹுரோவாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதில் அவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நவின் இயக்கத்தில் அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அப்படத்தின் ஃபர்ஸ்ட் கேரக்டர் லுக் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் ஆண்டனியா இது! ஆள் அடையாளம் தெரியவே சில வினாடிகள் ஆகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement